அர்னால்டின் வாழ்க்கை கதை
Arnold history in tamil - அர்னால்ட் Schwarzenegger 1947 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி Astria என்ற சிறிய நாட்டில் பிறந்தார். அப்பொழுது மிக கொடுமையான நாட்கள் என்று கூறலாம். ஏனென்றால் அங்கு உலகப்போர் 2 முடியும் காலம். அதனால் இவர் வாழும் கிராமத்தில் பட்டினியும் பல ஆண்மகன் தன் நாடு தோத்து விட்டது என்று பலர் சோகத்தில் குடிக்க ஆரம்பித்தனர். அதனால் Arnold Schwarzenegger தந்தை கூட குடிக்க ஆரம்பித்தார். இவர் தந்தை ராணுவ வீரர். அதனால் Arnold வீட்டில் அவ்வப்போது சண்டையும் ஏற்படும் இத்தனை கொடுமையான சூழலில் பிறந்த Arnold இப்பொழுது உலகிற்கே தெரியும் அளவு வளர்ந்த மனிதனை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
Arnold Schwarzenegger தனது பள்ளி வயதில் ஒரு படத்தை காண்கிறார், அதில் அமெரிக்கா காட்சி இடம்பெற்றது இதனை பார்த்த அர்னால்டு நாம் அங்கு செல்ல வேண்டும் என்று அப்பொழுது அவர்கள் எண்ணம் வந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஒரு மேகசீன் பார்க்கிறார். அந்த மேகசீன் முதல் பக்கத்தில் ஒரு பாடி பில்டர் புகைப்படமும் அவர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது. இதனை Arnold முழுமையாகப் படித்தார். அந்நாள் முதல் இவர் போல் ஒரு பாடி பில்டராக ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தார்.
ஆனால் அர்னால்ட் சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருந்தாராம். இதனால் Arnold நண்பர்களும், பள்ளி மாணவர்களும் இவரை போட்டு அடிப்பார்களாம் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் Arnold Schwarzenegger தன் கிராமத்தில் உள்ள ராணுவ வீரர்களுடம் சென்று எனக்கு உங்களுக்குத் தெரிந்த உடற்பயிற்சியினை சொல்லிக் கொடுங்கள் என்று கேட்பாராம். அதனால் அவர்களும் சொல்லிக் கொடுப்பார்கள் இவர் ஒன்றொன்றாக கற்றுக் கொண்டே, தன் வீட்டில் உள்ள கற்களை வைத்து இவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து கொண்டு இருப்பார். இவர் எங்கு பாடிபில்டர் புகைப்படங்களை கண்டாலும் அதை கிழித்துக்கொண்டு தனது வீட்டு சுவரில் ஒட்டி வைப்பாராம் இதனை கண்ட விட்டார் ஏன் இப்படி செய்கிறாய்? உனக்கு என்னவாயிற்று? என்று திட்டிக்கொண்டே இருப்பார்கள்.
ஒரு நாள் Arnold தந்தை நீ இங்கிருந்தால் சரிப்பட்டு வரமாட்டாய் என்று அர்னால்டை ராணுவ பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றாலும் தனது உடற்பயிற்சியை விட வில்லை Arnold. இவர் மாலை ராணுவப் பயிற்சி முடிந்தவுடன் மாலையில் அங்கு பின்புறமுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று மாலை முதல் இரவு வரை உடற்பயிற்சி செய்து கொண்டே இருப்பாராம் இதனால் அண்ணாவிற்கு ஒரு அழகான உடம்பும் கிடைத்தது இதனை வைத்துக்கொண்டு அங்கு Europeல் நடைபெற்ற பாடிபில்டிங் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார்.
யாருக்கும் தெரியாமல் செய்த உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வந்தது ஒரு நாள் தெரியவந்தது. அவர்கள் கண்டித்து அனுப்பி விட்டன. மறுபடியும் ArnoldvSchwarzenegger மாட்டிக் கொண்டு விட்டார். அதனால் இவரை அங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டனர்.
இவர் தன் கையில் உள்ள சிறு தொகையை வைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கு Arnold Schwarzenegger மிஸ்டர் ஒலிம்பியா போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் அங்கு சென்ற பின் தான் நான் இங்கு சிறியவன் அனைவரும் பெரிய உடல் கொண்டவர்கள் என்று தெரியவந்தது. அந்த போட்டியை நடத்திய ஒரு நடுவர் அர்னால்டை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் Arnold அதற்கு நான் Astriaயாவில் இருந்து வருகிறேன் என்றார். நடுவர் நீ எந்த உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார். அதற்கு Arnold நான் உடற்பயிற்சி கூடத்தில் எல்லாம் செல்லவில்லை நான் இப்பொழுதுதான் அமெரிக்கா வந்துள்ளேன் எனக்கு உடற்பயிற்சி கூட்டமும், பணமும் இல்லை இதனை கேட்டதும் நடுவர் மனம் மாறியது.சரி நீ என் வீட்டு மாடியில் தங்கிக்கொள் என்றார் நடுவர்.
அவர் வீட்டில் Arnold தங்கிக்கொண்டு காலை முதல் மாலை வரை கட்டட வேலைக்கு செல்வார். அதில் கிடைத்த பணத்தை வைத்து இவர் உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு தேவைப்படும் உபகரணங்கள் வாங்கிக் கொள்வார். இவர் மாலை முதல் இரவு வரை கடும் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார். இதனால் இவருக்கு கிடைத்த பரிசுதான் மிஸ்டர் ஒலிம்பியா மிஸ்டர் யுனிவர்ஸ்.
ஆனால் உனக்கு உடம்பு ஒன்றுதான் இருக்கிறது உனக்கு நடிப்பு என்று சுத்தமாய் தெரியாது உனக்கு ஆங்கிலமும் பேச வராது என்று வெளியே அனுப்பி விடுவார்கள். அதனால் இவர் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். மாலையில் நடிப்பு பயிற்சியும் கற்றுக்கொண்டார் இரவில் Arnold தன் உடற்பயிற்சியை செய்யவும் மறக்கவில்லை இவருக்கு சிறுசிறு டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதனைப் பயன்படுத்திக்கொண்டு Arnold Schwarzenegger மிகப்பெரிய நடிகராய் மாறியுள்ளார். இவரை வேண்டாம் என்று சொல்லியா தயாரிப்பாளர்கள் இவரை இப்பொழுது வைத்து படமெடுக்க எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Arnold Schwarzenegger சாதனை இன்னும் முடியவில்லை,இவர் இத்தனை சாதனை புரிந்த பிறகும் தன்னை வாழ வைத்த அமெரிக்க மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி இவர் அரசியல் கட்சியில் சேர்ந்து இப்பொழுது பல நன்மைகளை அமெரிக்க மக்களுக்கு செய்து வருகிறார்.
இவர் தன்னை பார்த்து உனக்கு வராது நீ முன்னேற மாட்டாய் என்று சொல்லியே முன்னால் மிகப் பெரிய மனிதனாக வாழ்ந்து காட்டிய மனிதர்களுள் எடுத்துக்காட்டாக Arnold யும் சொல்லலாம்.
0 Comments