About M.S.Subbulakshmi
எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதி 1917-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தார். இவர் இசை சூழலில்தான் வளர்ந்தார் ஏனெனில் வீணை கலைஞரான தாயே எம் எஸ் சுப்புலட்சுமி முதல் குரு.
எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் ஐந்தாம் வகுப்பு வரைதான் கல்வி பயின்றார்கள் அதன்பின்பே தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டனர். 17 வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் மேதைகள் பலர் முன்பு கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றவர்.
திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களை தேடி வந்தது. அதன் மூலம் இவருக்கு மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. ஆனால் அந்த மீரா திரைப்படம் ஏ எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களுக்கு கடைசி திரைப்படமாகவும் அமைந்தது.
இந்தியா முழுவதிலும் உள்ள பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இவரின் காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில், கண்ணன் முதலிய பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
நேரு சரோஜினி நாயுடு போன்ற மாபெரும் தலைவர்களாலும் பாராட்டு பெற்றவர்.
1954ஆம் ஆண்டு ஹெலன் ஹெல்லர் அவர்கள் கையால் தாமரையணி விருது பெற்றார்.
1963 ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் மற்றும் 1966ஆம் ஆண்டு சுப்புலட்சுமி அவர்கள் பாடியுள்ளார்.
1974 ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கு இணையான மகசேசே இசை விருது எம்எஸ் சுப்புலட்சுமி இசைக்கு கிடைத்த மாபெரு மகுடம் ஆகும். இவ் விருதைப் பெறும் முதல் இசைக் கலைஞர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் சமஸ்கிருதம் மலையாளம் இந்தி மராத்தி குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இவர் பாடியுள்ளார்.
இந்தியா மிகவும் உயரிய விருதான இந்திய மாமணி விருதளித்து சிறப்பித்து.
எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் சென்னையில் இறுதியாக டிசம்பர் 17ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இந்தப் பதிவில் இருந்து உங்களுக்கு என்ன தெரியவருகிறது ஒரு பெண் நினைத்தால் முயன்றால் முன்னேறலாம் வெல்லலாம் நீங்களும் முயலுங்கள் முன்னேறுங்கள் வெல்லுங்க.
0 Comments