Avvaiyar Full Life History In Tamil

மூன்று அவ்வையாரின் வாழ்க்கை வரலாறு - Avvaiyar Life History In Tamil

Avvaiyar History In Tamil : 

தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே அவ்வையார் அளவுக்கு புகழ் பெற்ற பெண் புலவர் யாருமே இல்லை. அந்த அளவிற்கு இவர்கள் எழுதின பாடல்கள் பிரபலம் வாய்ந்தது.

நாம் இந்த காலத்தில் பெண்களுக்கு சம உரிமை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் சங்க காலத்திலேயே ஆண்பால் புலவர்களுக்கு நிகராக பெண்பால் புலவரான அவ்வையார் பாடல்களை இயற்றி ஆண்களுக்கு நிகராக சாதித்துள்ளார். 

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை படிக்கும் வகையில் பாடல்களை இயற்றினார் அவ்வையார் ஆனால் இந்த அனைத்து நூல்களையும் எழுதியவர் ஒரு அவ்வையார் என்று சொன்னால் அது பொய், ஏனெனில் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் மூன்றிற்கு மேற்பட்ட அவ்வையார் இருந்திருக்கிறார்கள் என்று வரலாற்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

எனவே தமிழ் பாட்டியான அவ்வையார் பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்!!

Avvaiyar history in tamil

இந்த பதிவின் தலைப்பை படித்தவுடன் நீங்கள் என்னது மூன்று அவ்வையாரா? என்று கேட்பீர்கள். ஆம், தமிழ் ஆய்வாளர்கள் அவ்வையார் பெயர் கொண்ட புலவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்.

Avvaiyar பெயர் காரணம்

அவ்வை என்றால் வயதானோர் என்று அர்த்தம் மற்றும் யார் என்றால் மரியாதைக்கு கூப்பிடும் சொல்லாகும். முதலில் வாழ்ந்த அவ்வையார் புகழ் பெற்ற பெண்பால் புலவர் ஆக இருந்ததால் இவரை அடுத்து வரும் அவர்கள் இவரின் பெயரை சூட்டிக் கொண்டனர்.

முதலாவது அவ்வையார் 

 இந்த சங்க கால அவ்வையார் மற்றவர்கள் போல் வயதானவர் இல்லை. இவர் கண்டிப்பாக இளமையாக தான் இருந்திருப்பார் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இவர் சங்க காலத்தில் ஒரு விறலி. விறலி என்றால் பாடுபவர்கள் மற்றும் நடன ஆடுபவர்கள் மற்றும் இவர்கள் இளம்பெண்ணாக தான் இருப்பார்கள் என்று சில பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.

வாழ்ந்த காலம்

 இவரின் வாழ்ந்த காலம் ஆனது இவர் எழுதிய  பாடலிலிருந்து மற்றும் மன்னர் களை வைத்து  கணித்து உள்ளனர். முதலாவது அவ்வையார் சங்க காலத்தில் வாங்கியிருக்கிறார் அதாவது கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார்.

எழுதிய பாடல்கள்

எட்டுத்தொகை புறநானூறு நற்றிணை குறுந்தொகை அகநானூறு போன்ற நூல்களில் கிட்டத்தட்ட 56 பாடல்கள் எழுதி உள்ளார். சங்ககால இலக்கியத்தில் அதிக பாடல் எழுதிய புலவர்கள் அவ்வையார் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

பெருமை - Points About 1st Avvaiyar

இவர்தான் சங்க காலத்தில் வாழ்ந்த அதியமான் மற்றும் வேல்பாரிடம் நட்புக் கொண்ட புலவர் ஆவார். 

இந்த அதியமான் தான் தனக்கு கிடைத்த அதிசய நெல்லிக்கனியை இந்த அவ்வையாரிடம் கொடுத்தார். எதற்கு என அதியமானிடம் அவ்வையார் கேட்டார். அதற்கு அதியமான், இந்த ஆயுள் நீடிக்கும் நெல்லிக்கனியை சாப்பிட்டால் அவர் மட்டும் வாழ்வதில்லை அவரின் மூலம் தமிழ் வாழும் என்று அந்த நெல்லி கனியை அவ்வையார் இடம் கொடுத்தார். இந்த அதியமான் பண்பை பாராட்டி பல நூல்களில் எழுதியுள்ளனர்.

 அதன்பிறகு அதியமான் இறந்ததால் அவ்வையார் உருக்கமான பாடலை எழுதினார். இது கேட்போர் மனதை உருக வைக்க செய்தது. இன்றளவும் நாம் அதியமானை நினைவில் வைத்திருக்க காரணம் அவ்வையார் பாடல்கள் ஆகும்.

இது மட்டுமின்றி திருவள்ளுவர் அவர் எழுதிய திருக்குறளை மதுரை தமிழ் சங்கத்தில் வெளியிட முக்கியமான காரணமாக இருந்தவர் அவ்வையார் ஆகும்.

இந்த அவ்வையார் தான் கடையேழு வள்ளல்களில் ஒருவரான முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார் என்று வரலாற்று குறிப்புகளில் இருக்கிறது.

இரண்டாவது அவ்வையார்

இந்த அவ்வையார் தான் வயதான தோற்றமுடைய பெண்மணி ஆவார். இவர் எழுதிய பாடல் தான் ஆத்திச்சூடி இந்த ஆத்திச்சூடி இன்றளவும் தமிழ் பாடப் புத்தகங்களில் வருகிறது.

வாழ்ந்த காலம்

இவர் கவிஞர் கம்பர் மற்றும் மற்றும் ஓட்றகூத்தன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அதாவது இரண்டாவது அவ்வையார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து இருக்கிறார் என்று தமிழ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

எழுதிய நூல்கள்

இவர்தான் அறநெறி நூல்களான ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் நல்வழி மூதுரை அசதிக்கோவை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

பெருமை - Points About 2nd Avvaiyar

இந்த அவ்வையார் சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்திருக்கிறார். குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் தமிழ் பாலையும் ஊற்றி அவர் இந்த கால அவ்வையார் தான். ஏனெனில் இவர் எழுதிய ஆத்திச்சூடி தான் சின்ன குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களை ஞாபகம் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மூன்றாவது அவ்வையார்

வாழ்ந்த காலம்

மூன்றாவது அவ்வையார் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்று தமிழ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

எழுதிய நூல்கள்

விநாயகர் அகவல், அவ்வை குறள் இவர் எழுதிய நூல்கள் ஆகும்.

விநாயகர் அகவல்

மூன்றாவது அவ்வையார் தான் இந்த விநாயகர் அகவல் பாடலை எழுதியுள்ளார். இன்று அளவிற்கும் இந்த விநாயகர் அகவல் பாடல்தான் விநாயகரை பற்றி பாடிய முதன்மை பாடலாகும்.

அவ்வை குறள்

இந்த அவ்வை குறள் நூலை எழுதியவர் மூன்றாவது அவ்வையார் ஆவார். பொதுவாக தமிழில் நான்கு நெறிகள் கூறுவார்கள் அறம் பொருள் இன்பம் வீடு ஆகும். திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அறம் பொருள் இன்பம் அறங்களை பற்றி திருக்குறள் எழுதியுள்ளார். 

மிச்சமிருக்கும் வீட்டு நெறியை பற்றி இந்த மூன்றாவது அவ்வையார் அவ்வை குறள் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை மூன்று அதிகாரங்களாக பிரித்து மொத்தம் 310 குரல் எழுதியுள்ளார் இந்த அவ்வை குரல் திருக்குறள் போலவே ஈரடி வெண்பா அவர்களால் எழுதப்பட்ட பாடல்கள் ஆகும்.

Conclusion Of Avvaiyar History In Tamil - முடிவுரை

தமிழ்நாட்டில் இந்த மூன்று அவர்கள் மட்டும் இல்லை இவர்கள் போல் நிறைய பெருமை வாய்ந்த அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று கதைகளில் குறிப்பு இருக்கிறது. ஆனால் அவர்களைப் பற்றிய முழு வரலாற்று குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை.

ஒரு சில தமிழ் அறிஞர்கள் தமிழ்நாட்டில் நாலு அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் மற்றொரு தரப்பு தமிழறிஞர்கள் தமிழ் நாட்டின் மூன்றாவது தான் இருந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

தமிழ் பாடப் புத்தங்களில் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் இருந்தவர் ஒரு அவ்வையார் இல்லை என்று கூறப்பட்டது. ஆத்திச்சூடியை எழுதியவர் வேறொரு அவ்வையார் என்றும் மற்றொரு சங்ககால அவ்வையார் இருந்திருக்கின்றார் என்றும் தமிழ் பாடப்புத்தகத்தில் மூலமாக 2013 அன்று தான் தெரிய வந்தது.

எனவே மாணவன் மாணவிகளுக்கு தெளிவாக கூற வேண்டிய பள்ளி கல்வி துறைக்கே எத்தனை அவ்வையார் இருந்திருக்கிறார் என்று கண்டறிய முடியவில்லை. அதற்கு எந்த வரலாற்று குறிப்புகளும் இல்லை தான் காரணமாகும்.

 எனவே தமிழ் மக்களே, தமிழ்நாட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட அவ்வையார் இருந்திருக்கிறார். இன்னும் சில பேர் ஒரு அவ்வையார் தான் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த avvaiyar history in tamil பதிவில் கூறப்பட்டதை அந்த மாதிரி நினைத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் கூறி, உங்கள் தெரிந்தவர்களுக்கு புரிய வையுங்கள் என்று இந்த பதிவின் மூலம் குறிப்பிடுகிறேன்.

Post a Comment

0 Comments