புலி ஆட்டம் பற்றிய குறிப்பு
தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாக திகழ்வது புலி ஆட்டம் ஆகும். பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.
விழாக்களில் புலி வேடமிட்டு உடம்பெங்கும் புலியைப் போன்ற கருப்பும் மஞ்சளும் ஆன வண்ணங்களோடு, துணியாலான வாழை இடுப்பில் கட்டிக் கொள்வர். தப்பு மேலும் மேளத்திற்கு ஏற்ப ஒருவரோ, இருவரோ ஆடுவர்.
புலியைப் போன்றே நடந்தும், பதுங்கியும், பாய்ந்தும், எம்பிக் குதித்தும், நாக்கால் வருடியும், பற்கள் தெரிய வாயைப் பிறந்தும், உறுமியும் பல்வேறு விதமாக ஆடிப் புலி ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.
0 Comments