Arusuvai in tamil - இந்த தொகுப்பில் நாம் அறுசுவை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள போகிறோம் இந்த ஆறு சுவையால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்க போகிறோம்.
Arusuvai | அறுசுவை என்றால் என்ன?
Arusuvai - அறுசுவை என்றால் ஆறு சுவையைக் குறிக்கக் கூடிய சொல் ஆகும். இதனை இந்திய மருத்துவர்களும் மற்றும் ஆயுர்வேதமும் இந்த ஆறு சுவைகளையும் குறிப்பிடுகின்றனர். இந்த ஆறு சுவைகள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
குறிப்பாக இந்த ஆறு சுவைகள் நம் உடலிலுள்ள 7 முக்கியமான தாதுக்களைக்கு வளர்ச்சி அளிக்கவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. அந்த ஏழு தாதுக்கள் என்னவென்றால் மூளை, உமிழ்நீர், எலும்பு, தசை, நரம்பு, கொழுப்பு, இரத்தம் ஆகும்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள்கள் இந்த அறுசுவையும் சரியாக அளவில் எடுத்துக் கொண்டதால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க முடிந்தது. ஆனால் இக்காலத்து மக்கள் இதனை சரியாக அளவில் எடுத்துக் கொள்ளவில்லை அதனால் தான் பல நோய்கள் இப்பொழுது வருகின்றன.
அருசுவை வகைகள் என்ன | Types of Arusuvai in tamil
நாம் மேலே அறுசுவை என்றால் ஆறு வகைப்படும் என பார்த்தோம் அந்த ஆறுவகை என்னவென்றால்,
- உவர்ப்பு
- கார்ப்பு (காரம்)
- இனிப்பு
- துவர்ப்பு
- புளிப்பு
- கசப்பு
Arusuvai in tamil
உவர்ப்பு (salt)
இந்த உவர்ப்பு சுவையை அனைத்து உணவிலும் நாம் அக்காலத்தில் இருந்து இக்காலத்து வரை சேர்த்துக் கொண்டு வருகிறோம்.
நாம் இந்த உவர்ப்புச் சுவை உள்ள உணவு பொருட்களை அதிகமாக உட்கொண்டால் தோல் சுருங்குதல் போன்ற விளைவு ஏற்படும்.
உவர்ப்பு சுவை உள்ள உணவுகள்
பொதுவாக இந்த உவர்ப்பு சுவையானது அதிகமுள்ளது உப்பில் தான் மற்றும் உணவு பொருட்களில் சுரைக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, போன்ற காய்கறிகளிலும் இந்த உவர்ப்பு சுவை உள்ளது.
இனிப்பு (sugar)
உங்கள் உணவில் இனிப்பை சேர்த்து எடுத்துக் கொண்டால் உங்கள் தசை வளர்ச்சிக்கு உதவக்கூடும்.
இப்போது அனைத்து மக்களுக்கும் நடிகர்கள் மிகவும் பிடித்த சுவையாக இருக்கிறது இதனை அதிகமாக உட்கொண்டால் சோர்வு, தூக்கம், உடல் எடை அதிகரித்தல் போன்ற உபாதைகள் வரும்.
இனிப்பு சுவையுள்ள உணவு வகைகள்
இனிப்பு சுவை என்றால் பலகாரத்தின் மட்டுமில்லை இனிப்புச் சுவையானது நாம் அன்றாடம் சாப்பிடும் சாதம், கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் பல வகைகளிலும் உள்ளது.
கார்ப்பு
இந்த சுவையானது செரிமான தன்மையை அதிகப்படுத்தும் மற்றும் அசைவ உணவை அதிகம் செய்ய உதவும். மற்றும் தோல் நோய் போன்றவற்றை தடுக்கின்றது.
கார்ப்பு சுவை அதிகமாக உட்கொண்டால் வியர்வை அதிகம் சுருக்குதல், குடல் புண், உடல் சூட்டை போன்றவற்றை அதிகரிக்கும்.
கார்ப்புச் சுவை உள்ள உணவுகள்
மிளகாய், இஞ்சி, வெங்காயம், மிளகு போன்றவற்றில் இந்த கார்ப்பு சுவையுள்ளது.
புளிப்பு
புளிப்புச் சுவையானது நரம்புகளை வலுப்படுத்தும் மற்றும் பசித் தன்மையை அதிகரிக்கும்.
புளிப்புச் சுவையை அதிகமாக உணவில் உட்கொண்டால் அரிப்பு, ரத்தக்கொதிப்பு நெஞ்செரிச்சல் போன்ற விளைவுகள் ஏற்படும் மற்றும் பற்கள் வலுவடையும்.
புளிப்புச் சுவை உள்ள உணவுகள்
புளியங்காய் நார்த்தங்காய் இட்லி தோசை எலுமிச்சை தயிர் போன்றவற்றில் இந்த புளிப்புச் சுவை அதிகம் உள்ளது.
துவர்ப்பு
இந்தத் துவர்ப்புச் சுவையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை ஆகும். இந்த சுவையானது அதிக வியர்வை சுரப்பிகளை கட்டுப்படுத்தும் மற்றும் வயிற்று சம்பந்தமான கோளாறுகளை நீக்கும்.
இந்த துவர்ப்புச் சுவை உள்ள உணவினை அதிகமாக உட்கொண்டால் பேச்சு தன்மையை தடைசெய்யும் மற்றும் இளமையிலேயே முதுமை போல் தோற்றத்தைக் கொடுக்கும்.
Related : சக்கரவள்ளி கிழங்கு நன்மைகள்
Related : பேரிச்சம் பழம் நன்மைகள்
துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள்
மாவடு, மாதுளை பழம், அத்திக்காய், நவாபழம், வாழைக்காய், அவரை போன்றவற்றில் இந்த துவர்ப்புச் சுவை அதிகம் உள்ளது.
கசப்பு (bitter)
இந்த காலத்தில் பலர் இந்த கசப்பு சுவையை உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் இந்த கசப்பு சுவையானது மிகவும் நம் உடலுக்கு நன்மை பயக்கும்.
கசப்பு சுவையை உணவில் உட்கொண்டால் பசித் தன்மையினையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் காய்ச்சல் உடல் அரிப்பு போன்றவற்றைத் தடுக்கும் மற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இந்த கசப்பு சுவையினை உணவில் அதிகமாக உட்கொண்டால் உடலில் உள்ள நீர் குறையும் மற்றும் தோல் வறண்டு போகும். மற்றும் மயக்கம் போன்றவற்றை அடிக்கடி ஏற்படுத்தும்.
கசப்பு சத்துக்கள் உள்ள உணவுகள்
பாவக்காய், வெந்தயம், ஓமம் வேப்பிலை, நிலவேம்பு, சுண்டைக்காய் போன்ற உணவுகளில் இந்த கசப்பு சுவை அதிகம் உள்ளது.
Related : பிரியாணி இலை நன்மைகள்
இறுதி விளக்கம்
Arusuvai in tamil - நம் உடலுக்கு இந்த Arusuvai எவ்வளவு முக்கியம் என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் ஆனால் இந்த ஆறு சுவையினை நீங்கள் சரியான அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்திருப்பீர்கள் அதனால் சரியான அளவில் உட்கொள்ளுங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
0 Comments