Self confidence story in -tamil தன்னம்பிக்கை கதை
ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த ஒரு மாணவன் தானும் படிக்காமல் மற்றவர்களையும் தொல்லை செய்து கொண்டு அவர்களையும் படிக்க விடாமல் இருந்தான்.
இதனை பார்த்த அப்பள்ளியின் ஆசிரியர் அம்மாணவனை கண்டித்தார். ஆனால், அந்த மாணவன் அவர் சொன்னது எதுவும் காதில் வாங்காமல் அவர் முன்பு இருந்தபடியே மற்றவர்கள் தொல்லை செய்து கொண்டே இருந்தான்.
இதனை மறுபடியும் பார்த்த ஆசிரியர் அவரை அப்படியே கண்டு கொண்டு விட்டு விட்டார். அதன் பின்பு ஒன்பதாம் வகுப்பு தேர்வு வந்தது. அனைவரும் அந்த தேர்வை எழுதினார்கள் ஆனால் அம்மாணவன் மட்டும் அந்த தேர்வில் தோல்வி அடைந்தான்.
இதனை கவனித்த ஆசிரியர் அவனை லேபுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் அங்கு தொட்டியில் உள்ள ஒரு மீனை பார்த்து இதனை நீ அப்படியே அச்சு அசலாக வரைய வேண்டும், உனக்கு இதற்கு கொடுக்கப்படும் நேரம் ஆனது பள்ளி முடியும் நேரம் வரைதான் அதற்குள் இந்த மீனின் படத்தை வரைந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார் ஆசிரியர். அதற்கு, அம்மாணவன் சரி என்று ஒத்துக் கொண்டான்.
இதனை கூறிவிட்டு அந்த ஆசிரியர் அந்த அறையை விட்டு சென்றார். அந்த மாணவரும் அந்த மீனின் படத்தை வரைய தொடங்கினார்.
இவர் சிறிது படத்தை வரையும் பொழுது அந்த மீனானது அசையத் தொடங்கியது. அந்த மீன் அங்குமிங்கும் சென்று கொண்டே இருந்தது அதனால் இவனால் தனது ஆசிரியர் சொன்னபடியே அச்சு அசலான மீனை வரைய முடியவில்லை.
அதனால் இவன் மிகவும் கவலை அடைந்தான் மற்றும் இவனின் சிந்தனை அந்த மீனை வரைவதில் மேல் இல்லை எப்பொழுது நான் வீட்டுக்கு செல்வேன் என்று தான் இருந்தது.
அந்த மீன் அங்குமிங்கும் சென்றது அதனால் பாதி படத்தைதான் வரைந்தான் அதற்குள் பள்ளி நேரம் முடிந்தது. அம்மாணவன் சரி, பள்ளி நேரம் முடிந்துவிட்டது அதனால் தனது ஆசிரியரிடம் இதை கொடுத்துவிட்டேன் நாளை வருகிறேன் என்று சொல்லி விடலாம் என்று எண்ணினான். ஆனால் இவர் ஆசிரியர் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதற்குப் பின்பு, அவன் அந்த ஓவியத்தை அந்த அறையில் வைத்துவிட்டு, நாளை வந்து ஆசிரியரிடம் நேரம் கேட்டுவிட்டு ஓவியத்தை வரைய தொடங்கலாம் என்று முடிவெடுத்து வீட்டுக்குச் சென்றான்.
அதன் பின்பு, அவன் பள்ளிக்கு வந்ததும் அந்த லாப் அறைக்கு சென்று அந்த படத்தை வரைய தொடங்கினார். ஆனால் அந்த ஆசிரியர் அன்னாளில் பள்ளிக்கு வரவில்லை.
ஆசிரியர் வரவில்லை என்றால் என்ன நாம் அந்த படத்தை இன்று வரைந்து முடித்து விட்டு நாளை அவரிடம் கொடுத்து விடுவோம் என்று முடிவெடுத்தான்.
அதன் பின்பு வரைய தொடங்கினால் அப்போதுதான் இந்த மீன் அங்குமிங்கும் சென்று கொண்டே இருந்தது அதனால் அவன் மிகவும் கோபம் அடைந்தான்.
அதன் பின்பு அவன் மனதில் எந்த ஒரு சிந்தனையும் இல்லை, அவன் அந்த மீனின் மீது மட்டும்தான் கவனம் செலுத்தினான். அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது அந்த மீன் அங்கும் இங்கும் செல்லும் பொழுது அதில் உடம்பில் உள்ள நுணுக்கமான பகுதிகள் கூட தெரிய வந்தது இதனை அப்படியே அவனும் வரையத் தொடங்கினான். அப்படியே அவன் அந்த மீனை அச்சு அசலாக முழுமையாக வரைந்தான்.
இதற்கு அடுத்த நாள், அந்த மாணவனும் பள்ளி ஆசிரியரும் பள்ளிக்கு வந்தனர். இவனும் அந்த பள்ளி ஆசிரியரிடம் இவர் வரைந்த ஓவியத்தை காட்டினான். அப்பொழுது அந்த பள்ளி ஆசிரியர் அந்த அறையில் உள்ள ஒரு காகித பண்டில்களை அவனிடம் எடுத்துகொண்டுதார்.
இதில் உள்ள படங்களை விட நீதான் சிறந்ததாக மீனை வரைந்து இருக்கிறார் என்று கூறினார் ஆசிரியர். மற்றும் நீ ஏன் தேர்வில் தோல்வி அடைந்தார் என்று கேட்டார்? அதற்கு அந்த மாணவன் நான் சரியாக படிக்கவில்லை மற்றும் எனக்கு படிப்பு வரவில்லை என்று கூறினார்.
அதற்கு, அந்த ஆசிரியர் நீ உன்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறாய். உன் தோல்விக்கு காரணம் நீ கவனம் செலுத்தாமல் இருந்ததுதான் என்று கூறினார் ஆசிரியர்.
அப்போதுதான் மாணவனுக்கு தெரிந்தது நாம் சரியாக கவனம் செலுத்தியிருந்தால் இன்று நான் ஒன்பதாம் வகுப்பில்தேர்ச்சி அடைந்து இருப்போம் என்று புரிந்துகொண்டான்.
Related : inspiration story in tamil
Related : knowledge story in tamil
Moral of the story - கதையின் பொருள்
இந்த கதையிலிருந்து உங்களுக்கு என்ன தெரிய வருகிறது?
ஒருவரால் முடிந்தது உங்களால் முடியாது என்பது தவறு. நீங்கள் அதில் ஒழுங்காக கவனம் செலுத்தாத தான் உங்கள் தோல்விக்கான காரணம் ஆகும்.
நீங்கள் ஒரு வேலையை முழுமையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதில் மீது உங்கள் முழு கவனத்தை வைக்க வேண்டும் மற்றும் வேறு எதன் மீதும் உங்கள் கவனத்தை செலுத்த கூடாது.
Related : positive thinking short stories in tamil
அப்பொழுதுதான் நீங்கள் கண்ட லட்சியத்தை வெற்றி காண முடியும் என்பது தான் இந்த கதையின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் ஆகும்.
இதனை விட்டுவிட்டு நீங்கள் ஒரு செயலைச் செய்யும்பொழுது மற்றொரு செயலின் மீது கவனம் செலுத்தினால் இரு செயலையும் உங்களால் சரியாக செய்ய முடியாது.
Related : kalpana chawla history in tamil
இதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்தி இருக்கிறீர்களா? இல்லையா? என்று கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்.
மற்றும் நீங்கள் இதனை செய்திருந்தால் இந்த தவறை கண்டிப்பாக தீர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் திருத்திக் கொண்டால் கண்டிப்பாக உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைய முடியும் என்பது உறுதி.


0 Comments