Angkor wat temple history in tamil - இன்றைய காலத்தில் நாம் தொழில்நுட்பங்களை உச்சத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நாட்டின் அடையாளமானது அந்நாட்டின் பாரம்பரியத்தையும் மற்றும் கலைச் சின்னங்களை வைத்துதான் அறியப்படுகிறது.
நம் தமிழர்களின் கட்டடக் கலையும் மற்றும் நாகரிகமும் உலகம் சிறப்புமிக்கது. அந்த வகையில் இந்த பதிவில் நம் தமிழர்களால் கட்டிய அங்கோர் வாட் கோயிலை பற்றிய வரலாற்றை பார்க்கப்போகிறோம்.
அங்கோர் வாட் கோவிலின் சிறிய குறிப்பு
கோயிலின் பெயர் : அங்கோர் வாட்
கட்டிய காலம் : இரண்டாம் நூற்றாண்டு
நாடு : கம்போடியா
கட்டியவர் : இரண்டாம் சூர்யவர்மன்
Angkor wat temple history in tamil
Angkor wat history - உலகத்திலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தலமாக இருக்கிறது இந்த அங்கோர் வாட் கோயில். இந்தக் கோயில் கம்போடியா நாட்டில் உள்ளது. இந்த கோயிலானது தமிழர்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும்.
கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட அரசர்களில் ஒருவரான இரண்டாம் சூர்யவர்மன் என்பவரால் கட்டப்பட்டதுதான் இந்த அங்கோர் வாட் கோயில்.
இந்தியாவின் வடக்கே தாய்லாந்து மற்றும் வியட்நாமை அடுத்து அமைந்துள்ளதுதான் இந்த கம்போடியா நாடு. இந்த கம்போடியா நாட்டினை பன்னிரண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மன் அரசரால் கைப்பற்றப்பட்டு அங்கே எழுப்பப்பட்ட அதிசயம் தான் இந்த அங்கோர் வாட் கோயில்.
அப்போதைய சைவ சமயம் மன்னர்களின் பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக விஷ்ணுவுக்காக கட்டப்பட்டதுதான் இந்த பிரம்மாண்ட கோயில். உலகத்திலேயே விஷ்ணுவுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய வைணவ கோயிலாகும்.
Related : kalpana chawla history in tamil
Related : kanchipuram Athi varathar history
அங்கோர் என்றால் நகரத்தை குறிக்கும் மற்றும் வாட் என்றால் கோயிலைக் குறிக்கும். கம்போடியா நாட்டில் உள்ள கெமர் என்ற மொழியிலிருந்து வந்தது தான் இந்த அங்கோர் வாட் என்ற வார்த்தை.
இரண்டாம் சூரியவர்மன் இறக்கும் தருணத்தில் தான் இந்த அங்கோர் வாட் கோயில் அனைத்தையும் முழுமையாக கட்டப்பட்டது. இந்த கோயிலை முழுமையாக கட்டி முடிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட வருடம் ஆனது நாற்பது ஆண்டுகள். ஆனால் இப்போது உள்ள தொழில்நுட்பங்களை வைத்து கட்டி இருந்தால்கூட இந்த கோயிலை 40 ஆண்டுக்குள் முடித்து விட இயலாது என்பதுதான் வியப்பு தக்க செய்தியாகும்.
இரண்டாம் சூரியவர்மன் மறைவுக்கு பின்பு 70 ஆண்டு கழித்து கம்போடியாவின் பாரம்பரிய எதிரியான சம்பா இனத்தவர்களால் இந்த கோயில் கைப்பற்றப்பட்டது.
ஹென்றி முகத் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் இக்கோயிலின் சிறப்பை தன் புத்தகத்தில் வெளியிட்ட பிறகுதான் இன் கோயிலின் சிறப்பானது உலகப் புகழ் பெற தொடங்கியது.
சிதிலமடைந்த இக்கோயிலை 1982 - 1992 ஆண்டு மத்தியில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பிக்கும் பணியை செய்து. 1992 இல் நிறுவப்பட்ட கம்போடிய பாரம்பரிய பகுதியாக இருப்பதால் இதனை பராமரிக்க அரசால் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டின் கொடியில் உள்ளது.
கோயிலின் கட்டிடக்கலை
இக்கோயிலின் மத்திய கோபுரங்கள் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்தக் கோயிலின் சுற்றுப்புற சுவரின் நீளம் மூன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை காணப்படுகிறது. அப்படியானால் இந்த கோயிலில் உள்ள உட்புற சிற்பங்களின் வேலைப்பாடுகள் எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே சிந்தித்து செய்து பாருங்கள்.
மத்திய கோபுரத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள கூடங்களும் கோபுரங்களும் அரசனுக்கும், பிரம்மா, விஷ்ணுவுக்கும் அமைக்கப் பட்டவையாக கருதப்படுகின்றன.
தூண்களுக்கு இடையில் அமைந்த விகானம் தாமரை அலங்காரத்தை கொண்டு அமைந்துள்ளது. இதில் இரு பக்கங்களிலும் சிங்கத்தின் உருவ சிலைகள் அமைந்து இருக்கிறது.
இக்கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் மகாபாரதக் காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த கேமரானாலும் இந்தக் கோயிலின் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். ஆயிரம் அடிக்கு மேல் பறந்தால் மட்டுமே கோயிலில் முழு பகுதியும் படம் பிடிக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயம்.
Related : Avaiyar life history in tamil
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூகவலைதளங்களில் பகிருங்கள்...
0 Comments