Parithimar kalaignar life history in tamil - பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு

பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு

Parithimar kalignar history in tamil - நம் தாய்மொழியான தமிழுக்கு உயிரைக் கொடுக்கும் அளவிற்கு தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் Parithimar kalaignar. அவரின் முழு வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.


பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை குறிப்பு

பெயர் : பரிதிமாற் கலைஞர்

இயற் பெயர் : சூரிய நாராயண சாஸ்திரி.

ஊர் : மதுரை அடுத்துள்ள விளாச்சேரி

பெற்றோர் : கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்


Parithimar kalignar life history in tamil


பிறப்பு

பரிதிமார் கலைஞர், சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனிதமிழாக்கி கொண்டவர். இவர் மதுரையில் அடுத்த விளாச்சேரி என்னும் சிற்றூரில் 1870 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் ஆறாம் நாள் கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள் இணையரின் மூன்றாவது மகனாக பிறந்தார்.


கல்வி

Parithimar kalaignar தந்தை கோவிந்தசிவனாரிடம் வடமொழியும், மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்.


சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை (B. A) பயின்றார். இளங்கலை தேர்வில் தமிழிலும், தத்துவத்திலும், பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.


 தமிழுக்கு ஆற்றிய பணி

 தாம் பயின்ற கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியர் பணி வழங்கப்பட்டதை ஏற்காமல், தமிழ்த்துறை பணியை விரும்பி கேட்டு ஏற்றார். தாம் கற்பிக்கும் பாடங்களை செந்தமிழ் நடையில் சுவைபட விபரிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.


பிற துறை மாணவர்களும் பரிதிமார் கலைஞரின் வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் அவர் நடத்தும் பாடங்களை கேட்பார்கள்.


Parithimar kalaignar க்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பேராசிரியர் பணி வழங்க முன்வந்தது, ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை.


தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்த துடன் அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தார்.


மேலும் அவர் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை சுவைப்பட கற்பித்ததோடு தமிழை சுவைக்கவும் கற்பித்தார்.


மதுரை தமிழ்ச்சங்கம்

Parithimar kalaignar இன் ஒவ்வொரு செயலும் தமிழ் வளர்ச்சியை நோக்கிய அமைந்திருந்தது. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.


பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டிதுரை மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாத, இராகவனார் ஆகிய பேராசிரியர்கள் துணையுடன் மதுரை தமிழ் சங்கம் நிறுவப்பட்டது.


தமிழ்ப்புலமையும் தனித்தமிழ் பற்றும்

Parithimar kalaignar, தமிழின் மேன்மையை தாம் உணர்ந்ததோடு, உலகிற்கு உயர்த்துவதிலும் தலைசிறந்து விளங்கினார்.


யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் பரிதிமாற்கலைஞரின் தமிழ் புலமையையும், கவிபாடும் திறமையும் கண்டு திராவிட சாஸ்திரி என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்.


Parithimar kalaignar, தான் இயற்றிய தனிப்பாசுரத்தொகை என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றி பரிதிமாற் கலைஞர் என தனித்தமிழ் பெயரை சூட்டிக்கொண்டார். இந்நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.


Parithimar kalaignar, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்தபோது கல்லூரி முதல்வராக இருந்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் மில்லர்.


ஆங்கில பேராசிரியரான அவர் ஒரு நாள், டென்னிசன் இயற்றிய ஆர்தரின் இறுதி என்னும் நூலில் உள்ள ஒரு பாடலை நடத்தினார்.


அதில், துடுப்புகளை அசைத்து செலுத்தப்பட்ட படகானது அழகிய அன்னப் பறவைக்கு எடுத்துக்காட்டாக காட்டப்பட்டிருந்தது.


அதனை வியந்து பாராட்டிய மில்லர், “இங்கிலீஷ் இங்கிலீஷ் தான்; படகை நகர்த்தும் தொடர்புகளுக்கு உவமையாக பறவைகளின் சிறகை கூறியது வெள்ளையர்களின் அபூர்வ கண்டுபிடிப்பு” என்று பெருமையாக கூறினார். அதுமட்டுமன்றி, “தமிழில் இதுபோன்ற உவமை ஏதேனும் உண்டோ?” என்று மாணவர்களிடம் கேட்டார்.


அதற்கு Parithimar kalaignar, “  பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே கம்பராமாயணக் குகப்படத்தில் இத்தகைய உவமை உள்ளது என்று கூறி “விடுநனி கடிது” என்னும் அப்பாடலை பாடியும் காட்டினார். 


அதனைக் கேட்ட ஆங்கில பேராசிரியர் வியந்து அவரை பாராட்டினார்.


தமிழின் சிறப்பை உணர்த்தல்

தமிழ் சொற்கள் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதல், மணியும் பவளமும் கலந்து கோத்த மாலைகளை போலாகும், செந்நிறம் உடையதான மிளகாய்ப் பழம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து.


மணியோடு மிளகாய் பலத்தையும் கோத்து மாலையாக அணிந்தால் சிறுபொழுது செல்லும் முன்னரே மிளகாய் பழத்தின் தோல் காய்ந்து, காம்பொடிந்து, விதை உடம்பில் பட்டு வியர்வையோடு கலைந்து பொறுக்கமுடியாத எரிச்சலைத் தரும் என்பதை உணர்ந்த Parithimar kalaignar, வடசொற் வடசொற்கலப்பை கண்டிக்க தயங்கவில்லை.


தமிழ் தொண்டு

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில், பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி, வடமொழியை கொண்டுவர பல்கலைக்கழகத்தால் முடிவெடுக்கப்பட்டது.


ஆனால் 1902 ஆம் ஆண்டில் Parithimar kalaignar ரின் உறுதியான எதிர்பால், அம்முடிவை பல்கலைகழகம் கைவிட்டது. அவரது முனைப்பான முயற்சி இல்லையென்றால், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் அறவே நீக்கப்பட்டு இருக்கும்.


பரிதிமாற்கலைஞர் அவர்கள் ரூபாவதி, கலாவதி போன்ற முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.


அவர் ரூபாவதி கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து அடித்து நாடகக்கலை வளர்ச்சிக்கு துணை புரிந்தார்;


 சித்திர கவி எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார் சித்திர கவி என்னும் நூலை எழுதினார். குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்தில் ஐம்பத்தொரு பாடல்களுக்கு உரை எழுதி உரையாசிரியரும் விளங்கினார்.


மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கிவைத்த ஞானபோதினி என்னும் இதழை Parithimar kalaignar நடத்தினார். பரிதிமாற்கலைஞர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.


மாணவப் பருவத்திலேயே ஆங்கில பாடங்களை தமிழில் மொழிபெயர்த்தார். பிற்காலத்தில் வட மொழி நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்தார்.


மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின் செந்தமிழ் இதழில் உயர்தனி செம்மொழி என்னும் தலைப்பில் தமிழில் அருமை பெருமைகளை விளக்கியதோடு கட்டுரை வரைந்தார். தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக நிலைநாட்டினார்.


இறப்பு

Parithimar kalaignar history in tamil - தமிழ் உள்ளங் கொண்டு அயராது தமிழ் தொண்டாற்றிய Parithimar kalaignar, தனது முப்பத்து மூன்றாம் வயதில் 2/11/1903 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


 நற்றமிழில் பெயர் சூட்டவும், நற்றமிழில் தனிப் பெருமையை காக்கவும் உறுதி கொள்வதே Parithimar kalaignar தொண்டுக்கு நாம் காட்டும் நன்றி கடன் ஆகும்.

Post a Comment

0 Comments