How to use non copyright image for blogger in tamil
வணக்கம் நண்பர்களே, நாம் எதற்கு non copyright image உபயோகிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.
நீங்கள் copyright image உபயோகித்தால் உங்களுக்கு Google Adsense approval கிடைக்காது மற்றும் உங்கள் இணையதளம் மூடவும் (disable) வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் இணைய தளத்திற்கு எப்பொழுதுமே non copyright image மட்டுமே உபயோகிப்பதே சிறந்தது ஆகும்.
எப்படி non copyright image கூகுளில் எடுப்பது?
நீங்கள் முதலில் கூகுளில் சென்று உங்களுக்கு தேவையான புகைப்படத்தின் பெயரை search செய்யுங்கள். அதன் பின்பு கூகுளில் இடதுபுறம் image என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.
அதன்பிறகு, இடது புற இறுதியில் usage right என்று இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு Creative Commmon license மற்றும் commercial and other licences என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கும் அதில் நீங்கள் Creative Commmon license அதனை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
ஏனெனில் இது உங்களுக்கு non copyright image மட்டும்தான் காண்பிக்கும். அதன் பிறகே உங்களுக்கு தேவையான மற்றும் பிடித்த புகைப்படத்தை download செய்து உங்கள் இணையதளத்தில் உபயோகிக்கலாம்.
நீங்கள் commercial and other licences அதனை கிளிக் செய்தால் உங்களுக்கு copyright image சேர்ந்து வரும். நீங்கள் அந்த image download செய்து பயன்படுத்தினால் உங்களுக்கு கண்டிப்பாக copyright issues வரும். அதனால் தயவு செய்து இந்த தவறை மட்டும் உங்கள் இணையதளத்தில் செய்து விடாதீர்கள்.
அப்படி முன்பே செய்திருந்தால் உடனடியாக அந்த புகைப்படங்களை நீக்கி விடுங்கள் அல்லது அந்த புகைப்படங்களை சிறிது மாற்றம் (modify) செய்து உபயோகியுங்கள்.
Non copyright image free download sites
உங்களுக்கு non copyright image வேண்டுமென்றால் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் சென்ற பதிவிறக்கி கொள்ளலாம் இது முற்றிலும் இலவசம் மற்றும் non copyright image மட்டும்தான் உங்களுக்கு வழங்கும்.
Lists
- Pexel
- Pixabay
- unsplash
- Freerange
- Flickr
- vintage stock photos
Pexel
பல இனிய தளங்கள் இந்த பிக்சல் இணையதளத்தில் இருந்து தான் தனக்கு வேண்டிய non copyright image பதிவிறக்கி கொள்கிறார்கள் இது நிறைய பேரால் உபயோகிக்கப்படும் தலமாகும். இங்கு உங்களுக்கு தேவையான புகைப்படங்கள் இலவசமாக கிடைக்கும்.
Pixabay
இன்று இணையதளத்தை தான் நான் என்னுடைய இணையதள புகைப்படத்திற்கு பதிவிறக்கி பயன்படுத்திக் கொண்டு வருகிறேன்.
இதிலும் உங்களுக்கு தேவையான அனைத்து புகைப்படங்களும் கிடைக்கும். இதில் ஒரு சில stock image பணம் கட்டி மற்றும் proper credit for image கொடுக்க வேண்டும். ஆனால் இதிலுள்ள முக்காவாசி புகைப்படங்கள் இலவசமாகவே கிடைக்கிறது கிடைக்கிறது.
Flickr
இந்த இணையதளம் உங்களுக்கு தேவையான புகைப்படங்களை இலவசமாக வழங்கி வருகிறது. அதனால் இந்த Flickr இணையதளத்தில் நீங்கள் பயமின்றி புகைப்படங்களை பதிவிறக்கி உங்கள் இணையதளத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் இதனால் உங்களுக்கு எந்த ஒரு copyright issue வராது.
Free range
இந்த இணையதள பெயரை நீங்கள் கேட்டவுடனே இந்த இணைய தளம் உங்களுக்கு இலவசமாக non copyright image வழங்குகிறது என்று உங்களுக்கு தெரிய வந்திருக்கும்.
இதில் உங்களுக்கு பலவகையான புகைப்படங்களை வழங்குகிறது. இதில் வழங்கப்படும் புகைப்படங்கள் எல்லாம் non copyright ஆகும் அதனால் எந்த ஒரு பயமும் இன்றி இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் புகைப்படங்களை உபயோகிக்கலாம்.
Vintage stock photos
இந்த இணைய தளமும் உங்களுக்கும் இலவசமாக தான் வழங்குகிறது. இதில் கண்ணைக் கவரக்கூடிய colour ful and impressive image கிடைக்கும்.
அதனால் இந்த இணையதளத்தை ஒரு தடவையாவது பயன்படுத்தி பாருங்கள். ஏனெனில் இதில் கொடுக்கப்படும் புகைப்படங்கள் high quality யாக இருக்கும்.
Unplash
இந்த இணையதளத்தில் உங்களுக்கு high quality புகைப்படங்களை இலவசமாக தருகிறது. இந்த இணையதளத்திலும் உங்களுக்குத் தேவையான பலவகையான புகைப்படங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மறக்காமல் பயன்படுத்தி பாருங்கள்.
Conclusion
எனவே நீங்கள் உங்கள் இணைய தளத்திற்கு ஒரு புகைப்படம் உபயோகிக்க போகிறீர்கள் என்றால் non copyright image மட்டும் உபயோகியுங்கள்.
நீங்கள் இந்த high quality புகைப்படங்களை decompress செய்த பிறகு உபயோகிக்க ஏனெனில் நீங்கள் அப்படியே உபயோகித்தால் page load நேரத்தை அதிகரிக்கும்.


0 Comments